பசில் ராஜபக்சவை ஒன்பது வருடங்களாக காப்பாற்றிய சட்ட மா அதிபர்கள்

பசில் ராஜபக்ச சுற்றுலா அமைச்சில் இருந்த 78 இலட்சம் ரூபாவை அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருந்தும் ஒன்பது வருடங்களாக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.
ரஷ்ய சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உதயங்க வீரதுங்கவிடம் 12,000 ரீ-ஷர்ட்டுகளை அச்சிட்டுத் தருமாறு கோரப்பட்டது. சுற்றுலா அமைச்சின் நிதியத்திலிருந்த 78 இலட்சம் ரூபா இதற்காக ஒதுக்கி,டெண்டர்கள் கோரப்பட்டு,
அந்த அச்சிடும் பணிகளுக்காக நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும்,அந்தப் பணத்தை அதற்காகச் செலவிடாமல், பசில் ராஜபக்ச 2014 மாகாண சபை தேர்தலின் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
பசிலை காப்பாற்றிய சட்ட மா அதிபர்கள்
பொதுமக்களின் வரிப்பணத்தை ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் அல்லது ஓர் அரசியல் தலைவரின் பிம்பத்தைக் கட்டியெழுப்பவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்கோ எவ்விதத்திலும் பயன்படுத்த முடியாது.
அது முற்றிலும் சட்டவிரோதமானது. இச்சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்ததும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு,
உரிய கோப்பு பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2017 ஜூன் மாதம் 12 ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்டமா அதிபரிடம் 2017 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டு, இதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டது.
அந்தக் கோப்பு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து சட்டமா அதிபர்களாக சுஹத கம்லத், ஜயந்த ஜயசூரிய, தப்புல டி லிவேரா, சஞ்சய ராஜரத்னம் இப்போது பாலிந்த ரணசிங்க இருக்கிறார்.
அந்த காலப்பகுதியில் இதற்குத் தேவையான வழக்குத் தாக்கல் செய்யுவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை வழங்கும் சாத்தியக்கூறு இருந்தது.ஆனால் ஒரு நகர்வும் செய்யப்படவில்லை.
2016, 2017 முதல் 2019 வரை மைத்திரிபால – ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கம். அதற்குப் பின்னர் கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க அரசாங்கம்.
அந்த ஒவ்வொரு அரசாங்கத்தின்போதும் முன்னர் குறிப்பிட்ட சட்டமா அதிபர்கள் அந்தக் கோப்புகளை மூடிமறைத்து ஒளித்து வைத்துள்ளார்கள்.இவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்ட ஆலோசனையையும் வழங்கவில்லை.
இதற்கு அரசியல் தலையீடுகளும் இருந்துள்ளது. 2017 இல் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக வழங்கப்பட்ட அந்தக் கோப்பிற்கு, சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகே சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளது.
அதாவது 2026 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 22 ஆம் திகதி தான் பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பசில் ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளது.
![]()