உலகம்

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து மாணவர்கள் உள்பட 35 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஆசிம் கூறுகையில்,

இந்தச் சம்பவத்தில் 6 மாணவிகள் உள்பட 35 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆசிம், உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.

பெஷாவர் துணை ஆணையர் அஃபாக் வசீர், இந்தக் கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய குழந்தைகள், பள்ளி ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். அவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆளுநர் பைசல் கரீம் குந்தியும் இந்த மேற்கூரை விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *