உலகம்

சவூதி அரேபியாவில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதில் மூவர் பலி

யேமனில் செயற்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் பல வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.

யேமன் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு சவூதி அரேபியாவின் அப்ஹா வானூர்தி நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *