கவிதைகள்
புகைப்படக்கருவி… கவிதை… முல்லைஅமுதன்

எதுவும் என்னிடம் கேட்டதில்லை.
நன் விரும்பியதையெல்லாம்
கேட்காமலேயே வாங்கித்தரும் அப்பா
எதுவும் கேட்டதில்லை.
அம்மாவின் மறைவிற்குப்பின்
மகளிடம் பேச்சுவாக்கில்
சொல்லியிருந்தார்.
மிக நீண்ட இடைவெளியில்
ஊருக்குள் வந்தபோது
அப்பா இல்லை..
புகைப்படமாகினார்.
என் கையிலிருந்து நழுவியது
அவர் விரும்பிச் சொன்ன
புகைப்படக்கருவி.
![]()