இலங்கை

ஜே.வி.பி. குறித்து மாய விம்பம் உருவாக்கம்: எதிரணிக்கு பாடமெடுத்த மகாநாயக்க தேரர்

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தலதா மாளிகை மீது புலிகளைப் போல ஜே.வி.பியினர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பௌத்த சாசனம் அவமதிக்கப்படுவதாகவும், மகா சங்கத்தினருக்கு எதிராகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.

ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட விவகாரம் பற்றியும் எடுத்துரைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர்,

“பெரஹரா நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டது; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர்கள் (தேசிய மக்கள் சக்தியினர்) ஆன்மீக நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

இவர்கள் (ஜே.வி.பியினர்) குண்டுத் தாக்குதல் நடத்தினர் என எவ்வாறு குறிப்பிட முடியும்? யார் எதைச் சொன்னாலும் எங்களுக்கு உண்மை தெரியும்.

காவலில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தனர். புலிகளைப் போலக் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *