உலகம்

பெண் ஊழியருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த பொறியாளர்; காட்டிக்கொடுத்த ரகசிய கேமரா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், பெண் பொறியாளருக்கு தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளை வழங்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் தண்டனை பெற்ற நபர், தற்போது தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பெர்க்லி இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச்’ நிறுவனத்தில் பணிபுரிந்த டேவிட் சூ என்ற இரசாயன பொறியாளர், தனது உடன் பணிபுரிந்த ராங் யுவான் என்பவருக்கு சுமார் 18 மாதங்களாக குடிநீரிலும் உணவிலும் ‘காட்மியம்’ என்ற நச்சு உலோகத்தை கலந்து கொடுத்துள்ளார்.

காட்டிக்கொடுத்த ரகசிய கேமரா
இதனால் யுவானுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சந்தேகமடைந்த யுவான், தனது மேஜையில் ரகசிய கேமராவைப் பொருத்தியபோது, டேவிட் சூ அவரது குடிநீர் பாட்டிலில் நச்சை கலக்கும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகின.

இதனை தொடர்ந்து 2019-ல் கைது செய்யப்பட்ட டேவிட் சூ மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது, தனது நன்னடத்தை காலத்தை 2026-ல் முடித்துவிட்டதாக கூறி, சட்டப்பூர்வமாக தனது தண்டனை பதிவை நீக்குமாறு நீதிமன்றத்தில் டேவிட் சூ மனு தாக்கல் செய்துள்ளார்.

உயிருக்கு போராடி தப்பித்த யுவான், “நான் பலமுறை மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டுள்ளேன் அவரை சும்மா விடமாட்டேன்” என கடும் சினத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *