பலதும் பத்தும்

உடல் எடையை குறைக்க அதிகமா கஷ்டப்படுறீங்களா? இந்த கஞ்சியை செய்து குடிங்க

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்யும் கஞ்சியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலை உணவு என்பது மிகவும் முக்கியமாகும். காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவினால் தான் அன்றைய சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

ஆதலால் சத்தான உணவை காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இன்னும் உணவில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

சிறுதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தினை தருவதுடன் இதனை கஞ்சியாக சேர்த்துக் கொள்ளும் போது அதிக பலனை பெறமுடியும்.

தற்போது கருப்பு கவுனி அரிசியுடன், பச்சை பயறு சேர்த்து செய்யும் கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி – 1 கப்
பச்சை பயறு – 1/2 கப்
தண்ணீர் – 6 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தேங்காய் பால்/மோர் – தேவையான அளவு

உடல் எடையை குறைக்க அதிகமா கஷ்டப்படுறீங்களா? இந்த கஞ்சியை செய்து குடிங்க | Weight Loss Karuppu Kavuni Kanji Receipe

செய்முறை

முதலில் கருப்பு கவுனி அரிசியினை தண்ணீர் 4 முறை கழுவி 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பச்சை பயிறையும் 8 மணி நேரம் ஊற வைத்து துணியில் கட்டி ஒருநாள் முழுவதும் முளைகட்ட வைக்கவும்.

பின்பு ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து, குக்கரில் சேர்க்கவும், இதனுடன் முளைகட்டிய பச்சை பயிறையும் சேர்த்து, 6 கப் தண்ணீர், சீரகம் சேர்த்து 8 விசில் விட்டு இறக்கவும்.

உடல் எடையை குறைக்க அதிகமா கஷ்டப்படுறீங்களா? இந்த கஞ்சியை செய்து குடிங்க | Weight Loss Karuppu Kavuni Kanji Receipe

விசில் போனதும் குக்கரை திறந்து தேவையான அளவு கெட்டி தேங்காய் பல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.

மற்றொரு என்னவெனில் கஞ்சியுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்து சின்ன வெங்காயம் கலந்து குடித்தால், அசத்தலான உடல் எடையைக் குறைக்கும் கஞ்சி தயார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *