இலங்கை

ஈழப்போரில் இரசாயன ஆயுதங்களை தேடிய முன்னாள் ஊடகவியலாளர் எக்னெலிகொட

முன்னாள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை முன்னிலைப்படுத்தியே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரகீத் எக்னெலிகொட தொடர்பான பல விடயங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சமூக ஊடகங்கள் முதல் பிரதான சிங்கள ஊடகங்களில் பௌத்த கடும் போக்காளர்கள் மற்றும் இனவாதிகள் பல உரையாடல்களை உருவாக்கி வருகின்றனர்.

அண்மையில் பிரகீதின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

பேசுபொருளான புதிய விடயங்கள்

இப்போது புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் கதை என்னவென்றால், பிரகீத் எக்னெலிகொட என்பவர் மிகவும் மோசமான ஒரு தேசத்துரோகி, அவரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விடயம் சரி,சந்தேகத்தின் பேரில்தான் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தேசப்பற்றாளர்கள் என்கின்றனர்.

ஈழப்போரில் இரசாயன ஆயுதங்களை தேடிய எக்னெலிகொட | Prageeth Eknaligoda Chemical Weapons

அதில் பிரதான பேசுபொருளாக்கப்பட்ட விடயம் தான் இறுதி ஈழப்போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொய்களை எக்னெலிகொட எழுத முயன்றார் என்கின்றனர்.

ராஜபக்சக்களை பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்று எக்னெலிகொட தேடியதுதான்.

அது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு உட்பட்ட ஒரு விடயம். ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய எக்னெலிகொட இரசாயன ஆயுதம் பற்றி எழுதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவர் எழுதவில்லை என்பதால் அவர் தேடவில்லை என்று சொல்ல முடியாது. உவிந்துனால் அதைச் சொல்ல முடியாது.

எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவை எப்படிப் பிழை என்று சொல்வது? எக்னெலிகொடவிற்கு நெருக்கமாக இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

எனவே, எக்னெலிகொட எழுதவில்லை என்பதிலிருந்து அவர் தேடவே இல்லை என்று ஆகிவிடாது.

எழுதுவதற்கு முன்பே அவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம். சிலவேளை அதுவாகவே இருக்கலாம். உண்மையான காரணம் என்னவென்று துல்லியமாகத் தெரியாது.

மகிந்தவை கொலை செய்வதற்கான முயற்சி

இவ்வாறான காரணம் விசாரணைக்கு முக்கியமாக இருக்கலாம். அது பொய் என்றால், அவருக்கு எந்தப் பாதிப்பும் செய்ய வேண்டிய அவசியமில்லையே.

ஈழப்போரில் இரசாயன ஆயுதங்களை தேடிய எக்னெலிகொட | Prageeth Eknaligoda Chemical Weapons

 

அன்று போர் நடந்த வரலாற்றில் இன்னும் எவ்வளவோ பொய்கள் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று நமக்கு நினைவில் கூட இல்லை.அவை மூடிமறைக்கப்பட்டன.

மகிந்தவைக் கொலை செய்ய முயன்றால் என்றொல்லாம் சொல்லுகிறார்கள். இப்படி ஒன்று நடப்பதாக கிரித்தலே புலனாய்வு முகாமுக்கு தகவல் கிடைத்திருந்தால், எதற்காக எக்னெலிகொடவை கடத்திச் செல்ல வேண்டும்? அப்படியென்றால்,அவர்கள் அந்தத் தகவலை காவல்துறையிடம் கொடுத்திருக்க வேண்டும்.

எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கிலும் கிரித்தலே புலனாய்வு அதிகாரிகளே சம்பந்தப்பட்டுள்ளதாக சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள். கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்கள். ரவிராஜ் போன்றவர்கள் எவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று இதுவரை எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக இந்த நாட்டில் உள்ள அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்தும் அறிக்கைகள் கோரப்பட்டன அவர் ஏதேனும் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டிருந்தாரா என்று. ஆனால் பதில் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *