இலங்கை

ஜனாதிபதி அநுரவின் மிக மோசமான செயல்! மகிந்த தரப்பில் இருந்து வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பௌத்த மதத்திற்கும் புத்த சாசனத்திற்கும் எதிராக செயற்படுகின்றார் என்று பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான விவகாரம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார நடந்து கொள்ளும் விதம், பௌத்த மதத்திற்கும் புத்த சாசனத்திற்கும் எதிராக ஜனாதிபதி ஒருவர் செய்யக் கூடிய மிக மோசமான செயலாகவே எமக்குத் தோன்றுகின்றது.

எதிராக செயற்படும் ஜனாதிபதி
பௌத்த சாசனம், இனம் மற்றும் போர் வீரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக எவ்வாறு தாக்குதல் நடத்தப்படுகின்றன என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய அரசாங்கம் நாட்டை மதச் சார்பற்ற நிலையை நோக்கிக் கொண்டு செல்கின்றது என்ற விடயம் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

எமது புத்த சாசனத்திற்கு ஏற்படும் இந்த அவமதிப்பைக் கருத்திற் கொண்டு செல்படுவதே ஜனாதிபதி ஒருவரின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

மாறாக, புத்த சாசனத்தறி்கும் அல்லது நாட்டின் மகா சங்கத்தினருககும் எதிரான அவமதிப்புக்களையும் விமர்சனங்களையும் நாட்டுக்குள் உருவாக்குவது ஜனாதிபதி ஒருவரின் பொறுப்பாக இருக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *