இலங்கை

சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கும் ஜனாதிபதி; அனோஜனுக்கு மன்னிப்பு ஞானசாரருக்கு சிறையா?

அனோஜன் சிவராஜாவுக்காக சவூதி மன்னரிடம் எமது ஜனாதிபதி மன்னிப்புகேட்கத் தயாராகவிருக்கும் நிலையில் ஏன் ஞானசார தேரருக்கு எமது ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற நெற்பயிற் செய்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகைலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

பௌத்த மத மரபுகளை முன்னிலைப்படுத்திச் செயற்பட்ட பௌத்த தேரர்கள் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஞானசார தேரரின் காவியுடையை பலவந்தமான முறையில் களைந்தமை முற்றிலும் தவறு . பௌத்த தேரரில் காவியுடை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மகாநாயக்க தேரர்களுக்கே உள்ளது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் இலங்கை ஜனாதிபதி கோரிக்கை விடுக்கத் தயாராக இருக்கும் நிலையில், ஞானசார தேரர் விடயத்தில் ஏன் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சவூதி நாட்டின் தலைவரிடம் அனோஜன் சிவராஜாவுக்காக மன்னிப்பு கோர எமது ஜனாதிபதியால் முடியுமாயின் ஏன் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி இங்கு ஒரு முன்மாதிரியை எமது சந்திப்பதியினால் ஏற்படுத்த முடியாது? எனவே ஞானசார தேருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *