அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட கைது! சிறையிலுள்ள ஷிரந்தியின் ஆடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆடை விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் நேற்றைய தினம் (07.10.2026) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கைது
இந்த நிலையில் அரச வங்கி ஒன்றில் 10 மில்லியன் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் முன்னாள் முதல் பெண்மணி கைது செய்யப்பட்ட விடயம் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் தற்போது அவர் சிறையில் என்ன ஆடை அணிந்துள்ளார்? ஞானசாரருக்கு போன்று சிறைச்சாலை கைதிகளுக்கான பிரத்தியேக ஆடை ஷிரந்திக்கும் வழங்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வினவப்பட்டு வருகின்றன.
அணிந்துள்ள உடை
இவ்வாறான சூழலில் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆடைகளை அணிய அனுமதிக்கப்படும் வழக்கமான சிறைச்சாலை நடைமுறைக்கு இணங்க, அவரும் தற்போது தனது சொந்த சாதாரண உடையையே அணிந்துள்ளார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லேத்தன்னவின் தகவல்களின் படி, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச குற்றவாளிகளாக தண்டனை பெற்றவர்கள் அல்லாமல், சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகளுக்கான நிலையான சிறைச்சாலை நடைமுறைகளின்படி வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தனது சொந்த ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கண் தொடர்பான பாதிப்புக்குச் சிகிச்சை பெறுவதற்காக, ஷிரந்தி ஏற்கனவே சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் உள்ள தனது வழக்கமான மருத்துவரைச் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறைச்சாலை பாதுகாப்பின் கீழ் மதியம் 12:30 மணிக்கு அவர் நவலோக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார் என தெரியவருகிறது.
![]()