பலதும் பத்தும்

இளைஞர்களுக்காக ‘டேட்டிங்’ செயலி அறிமுகம் ; சிங்கப்பூர் அரசு அதிரடி

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்காக ‘First Date’ என்ற டேட்டிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 0.87 ஆகக் குறைந்துள்ள நிலையில், இளைஞர்களிடையே பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளைஞர்களுக்காக ‘டேட்டிங்

இந்த செயலியில் பதிவு செய்வதற்கு சிங்கப்பூரின் அரச சேவை அடையாளமான ‘Singpass’ பயன்படுத்தப்படுவதால், போலியான கணக்குகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணித அடிப்படையிலான பொருத்தம் காணும் முறையைப் பயன்படுத்தி, பயனர்களுக்கு பொருத்தமான துணையை செயலி பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, 21 முதல் 35 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களிடையே சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகள் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்த வரிசையில், சிங்கப்பூர் அரசின் இந்த புதிய முயற்சியும் கவனம் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *