உலகம்

பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்; 6,100 க்கும் மேற்பட்டோர் கைது

பிரான்ஸ் முழுவதும் பாடசாலைகளில் சிறந்த கல்வி வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் பாடசாலைக் கட்டிடங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து, நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

ஒக்டோபர் 6 அன்று நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களில், நாடு முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் ; 6,100 க்கும் மேற்பட்டோர் கைது | Student Protests Intensify France 6 100 Arrested

போராட்டங்களின் போது சில இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

இதுவரை இந்தப் போராட்டத்தில் 215க்கும் மேற்பட்ட மாணவர்களும், 700க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை 6,100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *