உலகம்

சவூதியின் முக்கிய இடங்களை தாக்கிய ஹூதிகள்

ஏமனில் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணி, ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஏவுகணை தளம் ஒன்றையும், சாதா மலைப்பகுதியில் உள்ள ஏவுகணை சேமிப்பு கிடங்கு ஒன்றையும் தாக்கி அழித்துள்ளதாக அதிகாரபூர்வ சவூதி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்போது அங்கிருந்த 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகர் சனா 2014 ஆம் ஆண்டு முதல் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் சர்வதேச விமான நிலையம், அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பிற இடங்களைத் தாக்கியதாகக் அறிவித்துள்ளது.

இந்த மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலத்த வெடிச்சத்தங்கள் ரியாத் நகரத்தில் கேட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *