உலகம்

நான் இல்லாவிட்டால் சவுதி அரேபியா, இஸ்ரேல் பூமியிலேயே இருந்திருக்காது ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்

“நான் சவுதி அரேபியாவுக்காக நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறேன். நான் சவூதி அரேபியாவைப் பாதுகாத்து வருகிறேன். நான் அதிபராக இருந்திருக்காவிட்டால், சவூதி அரேபியா இன்று இங்கு இருந்திருக்காது; இஸ்ரேலும் இங்கு இருந்திருக்காது.

அவர்கள் பூமியிலிருந்து துடைத்தெறியப்பட்டிருப்பார்கள்,” என்று அந்தப் பேட்டியில் ட்ரம்ப் கூறினார். ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேரடி அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சவுதி பட்டத்து இளவரசரின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்துவிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியானது.

இதன் பின்னணியில் பேசிய ட்ரம்ப், “எனக்கு பட்டத்து இளவரசரை மிகவும் பிடிக்கும். எங்களுக்குள் இப்போதும் மிக நல்ல உறவு உள்ளது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நான் இங்கு இல்லையென்றால், சவூதி அரேபியா, இஸ்ரேல், மற்றும் பல நாடுகள் இருந்திருக்காது,” என்று மீண்டும் கூறினார்.

இதற்கிடையில், ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா ஒரு புதிய தரைவழித் தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடலின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் அல்-மண்டாப் ஜலசந்தியைக் கைப்பற்றி, கடலோரப் பகுதிகளிலிருந்து ஹவுகளை விரட்டியடிப்பதே சவுதியின் நோக்கமாகும். சவுதி வான்வழி ஆதரவுடன் ஏமன் அரச படைகள் மீது தரைவழித் தாக்குதலைத் தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு உளவுத் தகவல்களை வழங்க அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது நேரடி இராணுவப் போரில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *