உலகம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பெண் ஊடகவியலாளருக்கு கிடைத்த உயரிய பதவி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் புதிய உதவியாளராக முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பத்திரிகையாளருமான பெனி ரே ஹார்மனி நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய கரோலின் லீவிட் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தச் சூழ்நிலையில், தற்போது 24 வயதான பெனி ரே ஹார்மனி இந்த முக்கிய பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரின் உதவியாளராக இணைவதை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி, என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததற்காக அதிபர் ட்ரம்பிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமெரிக்க மக்களுக்கு சேவை செய்வதிலும், ‘அமெரிக்க கனவை’ மெய்ப்பிக்க தொடர்ந்து போராடுவதிலும் எனது அடுத்த கட்ட பயணத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *