உலகம்

வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் இந்திய விமானி; நெதன்யாகு அழைப்பு

கடந்த 30ம் தேதி துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு 174 பயணிகளுடன் சென்ற ஃபிளை துபாய் விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது துணை விமானி அங்கிருந்த கோடாரியால் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கினார். மேலும் விமானத்தை வேகமாக கீழே இறக்கி விபத்தை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டார்.

ஆனால் காயம் பட்ட நிலையிலும் அவருடன் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்து பயணிகளின் உதவியுடன் அவரின் திட்டத்தை முறியடித்து அந்த விமானத்தை துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

நெதன்யாகு அழைப்பு
அந்த துணை விமானி கைது செய்யப்பட்டு அவருடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்மித் மச்சார் அபுதாபியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்மித் மச்சாரை நிஜமான ஹீரோ என பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு, அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து இஸ்ரேலின் சுதந்திர தின தீபத்தை ஏற்ற வருமாறு இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்திருக்கிறார்.

வழக்கமாக இந்த உயரிய மரியாதை இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.. ஆனால் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இஸ்ரேலியர்கள் உங்களை அரவணைத்துக் கொள்வார்கள்’ எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *