பலதும் பத்தும்

திருச்சி-யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்;  வாரத்தில் 3 நாட்கள் இயங்கும்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை, இன்டிகோ நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை (01) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 45 முதல் 50 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடையலாம்.

வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

1ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *