இந்தியா

ஸ்டாலினுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

தமிழகத்தில் பிரசார மேடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்து பேசியதாகக் கூறி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்ததுடன், அவரது உடலமைப்பைக் குறிப்பிட்டு உருவக் கேலி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக சட்டத்தரணிகள் அணி, பெண் வேட்பாளரை இழிவுபடுத்திய மு.க. ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் தலைமை இயக்குநர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைக் கையளித்துள்ளது.

இதேவேளை, தோல்வி பயத்தின் உச்சத்திலிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் தன்னிலை மறந்து பிரசார மேடைகளில் தரம் தாழ்ந்து பேசி வருவதாக பல தரப்பினர் கண்டனம் வௌியிட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *