உலகம்

யேமனில் தீவிரமடையும் மோதல் – 1,500 க்கும் மேற்பட்ட ஹூதிகள் உயிரிழப்பு அல்லது காயம்!

யேமனில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு முனைகளில் 474 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமன் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த கடுமையான தாக்குதல்களில் 1,540 ஹூதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகவும் இதில் ‘தாயிஸ்’ (Taiz) பகுதியில் மிகக் கடுமையான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியைக் இலக்கு வைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சவூதி கூட்டுப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன.

இதேவேளை, ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உறுப்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஹமாஸ் அமைப்பின் நிதிப் பின்னணிக்கு உதவி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வொஷிங்டன் புதிய தடைகளையும் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *