உலகம்

ரேடாரில் இருந்து மாயமான விமானம் – தேடுதல் பணிகள் தீவிரம்

மாசசூசெட்ஸின் Massachusetts நான்டக்கெட் Nantucket கடற்கரைக்கு அப்பால், 06 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இன்று அதிகாலையில் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து அமெரிக்க கடலோரக் காவல்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

குறித்த விமானம் பெர்முடாவிலிருந்து பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நான்டக்கெட்டின் தெற்கே உள்ள கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

விமானம் மறைவதற்கு முன்பு வேகமாகத் தாழ்ந்தது.

தொடர்பு துண்டிக்கப்படுவதற்குச் சற்று முன்பு, விமானம் அதன் உயரத்தில் ஒரு கூர்மையான மாற்றத்திற்கு உள்ளானதாக விமானப் பயணக் கண்காணிப்புத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *