பலதும் பத்தும்

கணவரை தேடி Google Form ; வைரலாகும் இளம்பெண்ணின் வித்தியாசமான திருமண முயற்சி

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், சார்லட் நகரைச் சேர்ந்தவர் ஆரின் பேட்டர்சன். இவர் தனது வாழ்க்கைக்கு பொருத்தமான துணை யை தேடும் முயற்சியில், வழக்கமான டேட்டிங் ஆப்களை தாண்டி புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த கூகுள் ஃபார்மில் திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள், வாழ்க்கை முறை, வேலை மற்றும் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

கணவரை தேடி Google Form ; வைரலாகும் இளம்பெண்ணின் வித்தியாசமான திருமண முயற்சி | Woman S Marriage Search Goes Viral On Google Form

 

மேலும், வருங்கால வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்க்கும் குணங்கள், குடும்ப வாழ்க்கை குறித்த எண்ணங்கள், திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்த விருப்பங்கள் போன்றவற்றை கேட்டுக்கொண்டுள்ளார்.

28 முதல் 47 வயதுக்குள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராகவும், திருமணத்துக்கு தயாராக இருப்பவராகவும் இருக்க வேண்டும் என அரின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவராகவும், சுமார் 5 அடி உயரம், 10 அங்குலம் அளவு மார்பு அல்லது அதற்கு மேல் உயரம் கொண்டவராகவும் இருப்பது விருப்பம் என தெரிவித்துள்ளார். அதே வேளையில் அன்பு, பாசம் ஆகியவை நிறைந்தவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தனியாக இருப்பதாக கூறியுள்ள அவர், டேட்டிங் ஆப்கள், நேரடி சந்திப்புகள் மற்றும் நண்பர்கள் மூலம் அறிமுகம் உள்ளிட்ட பல வழிகளில் துணையை தேடியதாக தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோரின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை தன்னை நீண்டகால உறவை நோக்கி பயணிக்க தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரினின் இந்த முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

லர் அவரது முயற்சியை பாராட்டிய நிலையில், சிலர் ஆச்சரியத்தையும் தெரிவித்துள்ளனர். ஆனால் திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் தீவிரமான நோக்கம் என ஆரின் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *