கல்கி பகவான் மகா சமாதி

ஏகத்துவ இயக்கத்தின் (Oneness Movement) நிறுவுனரும், உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவருமான ஸ்ரீ பகவான்(கல்கி பகவான்), நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, சென்னையில் தனது ஸ்தூல சரீரத்தை விட்டு மகாசமாதி அடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
நுரையீரல் தொற்றினால் ஏற்பட்ட செப்டிக் ஷொக் காரணமாகவும், அதனுடன் இருந்த இருதய-இரத்த நாளக் கோளாறு காரணமாகவும் அவர் காலமானார்.
அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும், தனது போதனைகள் மற்றும் ஆன்மிக வழிகாட்டுதலின் மூலம் இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள எண்ணற்ற மக்களை அமைதி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் சேவை நிறைந்த வாழ்க்கை நோக்கி வழிநடத்தினார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவரை நாடி வந்து, அவரது அருளையும் ஆசிகளையும் தரிசனத்தையும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ பகவானின் புனித ஸ்தூல சரீரம் செப்டம்பர் 30, புதன்கிழமை காலை 11.30 மணி முதல் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 ணி வரை, ஏகம் க்ஷேத்திரத்தில் பக்தர்களின் இறுதி தரிசனத்திற்காக வைக்கப்படும்.
பக்தர்கள் அவரது இறுதித் தரிசனத்தைப் பெற்று, பிரார்த்தனை செய்து, தங்களது மரியாதையை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி தரிசன நேரம்
அக்டோபர் 2: காலை 8.00 மணி – பிற்பகல் 3.00 மணி
பக்தர்கள் அமைதியான மற்றும் பிரார்த்தனை உணர்வுடன் வந்து, ஸ்ரீ பகவானின் இறுதி தரிசனத்தைப் பெற்ற பின்னர், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் மற்ற பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அங்கிருந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏகம் க்ஷேத்திரத்தில் தங்குமிட வசதி இருக்காது. எனவே, வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் தங்களது தங்குமிட ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்த நாட்கள் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதற்கு, பக்தர்கள் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணையவழி நேரலை தரிசனம்
உலகம் முழுவதும் உள்ள (Oneness) ஏகத்துவ இயக்கத்தின் பக்தர்கள் இறுதி தரிசனத்தில் இணையவும், பிரார்த்தனையில் பங்கேற்கவும், ஸ்ரீ பகவானின் இறுதி தரிசனம் இணையவழியாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.
நேரலை இணைப்பு:
![]()