உலகம்

சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி

சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது இந்திய மாலுமி உள்ளிட்ட 5 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாண கடற்பரப்பில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் ; இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி | Pirate Attack In Somalia 5 Killed An Indian Sailor

இந்நிலையில், மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு சோமாலியா நோக்கிப் பயணித்த பலாவு நாட்டுக் கொடியுடனான கப்பல், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பண்ட்லெண்ட் மாகாணம் அருகே சென்றபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

குறித்த கப்பலில் 17 மாலுமிகள் பயணித்திருந்தனர். கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் நடவடிக்கையை சோமாலிய கடற்படையினர் இன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 5 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர், ஒருவர் மியான்மரைச் சேர்ந்தவர் மற்றும் மூவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஞ்சிய 12 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், கச்சா எண்ணெய் கப்பலும் சோமாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *