உலகம்

மொஜ்தபா காமேனி சிகிச்சை பெற்ற வைத்தியசாலை மீது தாக்குதல் ; ஈரான் உயர் தலைவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை இடிபாடுகளுக்குள் இருந்து ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான மொஹ்சென் ஹைதாரி (Mohsen Heydari), தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டுத் தாக்குதலில் காயமடைந்த மொஜ்தபா கொமெய்னி, சிகிச்சைக்காக டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வைத்தியசாலை வளாகத்தையும் இலக்கு வைத்து குண்டுவீச்சு நடத்தப்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. தீவிர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மொஜ்தபா கொமெய்னி தற்போது இரகசியமான, அதிபாதுகாப்பு நிறைந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தபடியே நாட்டின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகளை வழிநடத்தி வருவதாகவும் ஈரானிய தரப்பு தெரிவிக்கின்றது.

அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இத்தாக்குதலுக்குப் பிறகு அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *