பலதும் பத்தும்

நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய நெய் -வாளி, பாத்திரங்களுடன் குவிந்த மக்கள்

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் நெய் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்ததில், அதிலிருந்த நெய் சாலையில் சிதறியது. இதையடுத்து அங்கு திரண்ட சிலர், சாலையில் கொட்டிக் கிடந்த நெய்யை வாளி மற்றும் பாத்திரங்களில் சேகரிக்கத் தொடங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

 

ஹரியானாவிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூருக்குச் சென்றுகொண்டிருந்த இந்த வாகனம், மொராதாபாத்தின் கட்கர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, சாலையில் பரவியிருந்த நெய்யை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

பின்னர் கவிழ்ந்த வாகனமும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *