உலகம்

அமெரிக்கர்கள் மத்தியில் குறைந்து வரும் ட்ரம்பின் செல்வாக்கு

50 சதவீத அமெரிக்கர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பணி செயல்திறனை கடுமையாக அதிருப்தியுடன் எதிர்கொள்வதாக கணக்கெடுப்பொன்று கண்டறிந்துள்ளது.

இந்தக் கடுமையான அதிருப்தி மதிப்பீடு, 2018-ல் பதிவான 45 சதவீத முந்தைய சாதனையை முறியடிப்பதோடு, 2006 இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜார்ஜ் டபிள்யூ. புஷ் பெற்றிருந்த 41 சதவீத அளவையும் விஞ்சியுள்ளது.

சுயேச்சை வாக்காளர்களிடையே இந்த அதிருப்தி குறிப்பாக அதிகமாகக் காணப்படுகிறது.

“ஒரு இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் தோல்வியை தழுவுவார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை ட்ரம்பின் வலுவான ஆதரவு மதிப்பீடு வெறும் 18 சதவீதமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *