உலகம்

நேபாளத்தில் தொடா் மழை; பல இடங்களில் நிலச்சரிவு; தலைநகருக்குப் போக்குவரத்து நிறுத்தம்

நேபாளத்தில் தொடா் மழையால் தலைநகா் காத்மாண்டுவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்த நகருக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்துவரும் இடைவிடாத மழையால், தலைநகரை பாக்மதி, கண்டகி, மாதேஷ் மற்றும் கிழக்கு நேபாளத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை, குறிப்பாக இரவு நேரப் பயணங்களைத் தவிா்க்கவும்; நதிக் கரையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *