உலகம்

இந்திய நடிகரை வைத்து டிரம்பை கிண்டல் செய்யும் ஈரான்! சமூக வலைத்தளங்களில் வைரல்

ஈரானை அழிப்பதாக டிரம்ப் கூறிவரும் சவால்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தூதரகம் இந்திய திரைப்பட காட்சிகளை பயன்படுத்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கிண்டல் செய்யும் வகையில், ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளமை உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்

 

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே தொடர்ந்துவரும் போர் சூழலில், இரு தரப்பு மோதல்களும் களத்தில் மட்டுமல்லாமல் சமூக ஊடகப் பக்கங்களிலும் கடுமையான வார்த்தை போராக இது கிளம்பியுள்ளன.

அதேவேளை முன்னதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மீமைப் பயன்படுத்திய ஈரான், தற்போது நடிகர் பாலகிருஷ்ணாவின் மாஸ் சண்டைக் காட்சியைப் பகிர்ந்துள்ளது.

“அமெரிக்கர்கள் சமீபகாலமாக ஹாலிவுட்டுக்குப் பதிலாக இந்திய திரைப்படங்களைப் பார்க்க தொடங்கியுள்ளனர்” என்று ஈரான் கிண்டலாக குறிப்பிட்டுள்ள இந்த சமூக வலைதளப் பதிவு,   வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *