இலங்கை

கொட்டும் மழைக்கு மத்தியிலும் 22 க்கு எதிராக பெரும் பேரணி; பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழையவும் முயற்சி

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு அருகில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற வளாகத் திற்குள் நுழையாத வகையில் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதிகளில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு இரு அடுக்குப் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன.

இதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணி கார ணமாக பத்தரமுல்ல, பொல்துவ சந்தி உன் விட்ட பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதை சுளில் நேற்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப் பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று காலை முதல் ஆரம்பமான நிலையில், அந்தச் திருத்தச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி ‘ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம் என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சி த் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையி லான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட் டது. கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் பெருமளவிலான எதிர்க்கட்சி ஆதர வாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் 22ஆவது திருத்தத்திற்கு எதிரான தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்
புகளின் பிரதிநிதிகளும் கறுப்புப் பட்டி அணிந்தவாறு இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யில் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று காலை 9 மணி முதல் பாராளு மன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 22ஆ வது திருத்தச்சட்டமூலத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும், நீதித்துறையில் தேவை யற்ற தலையீடுகளை செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தியும், அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் மற்றும் பல்வேறு கோச ங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு
பட்டனர். இதன்போது பொல்துவ சந்தியிலில் பெரு
மனவாள பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும், பாராளுமன்ற வீதியில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட் டிருந்தது. எனினும் அந்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற வளாகத்தை நோக்க ஆர்ப்பாட்டக் காரர்கள் வரவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல் களுக்கமைய ஜயந்திபுர நுழைவுபாதை மற்றும் பாராளுமன்ற வளாக உள்நுழைவு பாதை ஆகிய வாயில் பகுதிகளில் நூற்றுக் கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு இரு அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட் டிருந்தன. அத்துடன் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள விதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட குழுவொன்று பாராளு மன்ற ஜயந்திபுர நுழைவாயில் ஊடாக பிரதான நுழைவாயில் பகுதி வரையில் பேரணியாக வந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது. இதன்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் அவர்கள் திரும்பிச் சென்று மீண்டும் பொல்துவ சந்தி யில் இருந்த பிரதான ஆர்ப்பாட்டப் பேரணி யில் இணைந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப் பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *