தமிழ் – முஸ்லிம் கட்சிகள்; சவூதி தூதுவரை இன்று சந்திப்பர்?

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதுவரை இன்று வெள்ளிக்கிழமை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டிணைவின் பிரதிநிதிகள் சந்தித்து சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராஜா குறித்து கலந்துரையாடினர்.
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகஜர் ஒன்றைக் கையளிக்க கொழும்பில் உள்ள சவூதி தூதுவரை இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்
![]()