இலங்கை

அனோஜனின் விடுதலைக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அனோஜன் சார்பிலான இராஜதந்திர முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா (Faiszer Musthapha) மற்றும் உபுல் குமாரப்பெரும (Upul Kumarapperuma) ஆகியோர் இன்று புதன்கிழமை மாலைதீவில் நஷீதைச் சந்தத்துப் பேச்சு நடத்தினர்.

அனோஜன் பதிவிட்ட கருத்துகள் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை நஷீத் ஒப்புக்கொண்ட போதிலும், மனிதநேய அடிப்படையில் அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்குத் தான் ஆதரவளிப்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நஷீத்துடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாகவும், வரும் நாட்களில் சவூதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *