இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சதியின் முழுமையான நீதி கோட்டாபயவுக்கு வழங்கப்படும் தண்டனையே!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், அவரும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபராக மாறியுள்ளதாக தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பாடல் மையம் தெரிவித்துள்ளது.

எனவே, அந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்காகவோ அல்லது கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்காகவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையில்,

அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம்

“இந்த குண்டுத் தாக்குதல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றதும், இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றிணைத்ததுமான ஒரு குழு இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல் சதியின் முழுமையான நீதி கோட்டாபயவுக்கு வழங்கப்படும் தண்டனையே! | Punishment Gotabaya Regarding The Easter Attack

இப்போது அந்தக் குழுவை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தாகும். குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டவர்கள், தற்போது சுரேஷ் சலே அவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபராக வைத்துள்ளனர்.

தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இவ்வளவு காலம் வைத்தியசாலையில் வைத்திருக்கும் அளவுக்கு அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை.

எனவே, இந்த நாட்டின் மக்கள் முட்டாள்கள் அல்லர். இது தொடர்பாக மருத்துவர்களிடமிருந்து உண்மையான தகவல்களைப் பெற்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், தயவுசெய்து சுரேஷ் சலே அவர்களுக்கு எதிராக உரிய சட்ட விதிமுறைகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து, அவரையும் நியாயமான முறையில் விசாரணை செய்து, தீர்ப்பை வழங்குங்கள்.

அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக, மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராகவும் உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் வழக்குத் தாக்கல் செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, கடந்த சில நாட்களில் கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டதை நாம் பார்த்தோம். அதாவது, அவரும் இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நபராக இருக்கிறார் என்பதே இதன் பொருள்.

தண்டனை நடவடிக்கை

எனவே, அந்தச் சந்தேகத்தை நீக்குவதற்காகவோ அல்லது அவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து, அதன் மூலம் தண்டனை வழங்குவதற்காகவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் சதியின் முழுமையான நீதி கோட்டாபயவுக்கு வழங்கப்படும் தண்டனையே! | Punishment Gotabaya Regarding The Easter Attack

அப்போதுதான் இந்த ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடையும்.

அதன் மூலம் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால், அதுவே முழுமையான நீதியாக அமையும்.

எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு இந்த வகையில் நியாயமாக வழங்கப்பட்டதைப் போலவே, மீதமுள்ள வழக்குகளின் தீர்ப்புகளும் நியாயமான முறையில் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *