இலங்கை

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை அகற்றப்படும்?; யாழ்.நீதிமன்றத் தீர்ப்பையடுத்து நடவடிக்கை

நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்காக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை அகற்றுவதற்கு அனுமதிகோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திலீபனின் வெண்கலச்சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை அகற்றுவதற்கான அதிகாரம் பொலிஸாரிடமே இருப்பதால், இதில் நீதிமன்றத்தின் கட்டளைகள் அவசியமில்லை என்று குறிப்பிட்டே பொலிஸார் கோரிய கட்டளையை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சட்ட ஆலோசனையைப் பெற்று திலீபனின் சிலையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன என்று நம்பகரமான முறையில் அறிய முடிகின்றது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *