இலங்கை

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்!; 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் எதிராக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(22.09.2026) நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை, நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா என தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

முதலாம் இணைப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான பதிவுகள், அவதூறான கருத்துகள் மற்றும் சமூக மோதலைத் தூண்டும் வகையிலான கூற்றுகள் தொடர்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு (22) எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை

இந்த வழக்கு வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராகவும், 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்! 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Arjuna Harris Among 8 Sued Under Online Safety Act

 

வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளை (Conditional Order) பிறப்பிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, வழக்கின் மீதான முடிவு எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *