இலங்கை
அனோஜனின் விடுதலைக்காக யாழில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக நேற்று திங்கட்கிழமை மாலை-06 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணையில் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி போராட்டத்தில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
![]()