இலங்கை

களுத்துறை சென்று சிங்கம், புலி கதை சொன்ன அர்ச்சுனா; உற்சாக வரவேற்பு

“சிங்கமும் புலியும் ஒருபோதும் மோதிக்கொள்ளாது. ஆனால், இந்தக் கோட்பாடு நரிகளுக்குப் பொருந்தாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார்.

மேலும், “சிங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நரிகள் ஓடுவதற்கு இடமிருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன மற்றும் களுத்துறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் ரோஹித அபேகுணவர்தனவின் இல்லத்திற்கு வருகை தந்து, அவருக்குக் கேக் ஊட்டித் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன், அங்கு வருகை தந்திருந்த சிங்கள மக்களுடன் அவர் புகைப்படங்கள் (Selfie) எடுத்துக்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *