நிகழ்வுகள்

கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிகழ்வு

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யும் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரமாண்டமான 17 விநாயகர் சிலைகள் கொட்டகலையை சூழ உள்ள நகரங்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து கலை கலாசார நிகழ்வுகளுடன் கொட்டகலை ரொசிட்டா நகரிலிருந்து ஆரம்பமாகி
கொட்டகலை கொமர்ஷியல் வாவிவரை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மிகவும் பிரமாண்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டு குழு தலைவர் ஆர். விஜயபாலன் ஜி தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வுக்கு இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ், இலங்கை ஆச்சாரி சின்மயாமிஷன் பிரம்மச்சரி கார்த்திக் சைதன்யா, பட்டிமன்ற பேச்சாளர் சொல்லின் செல்வன் மணிகண்டன் உட்பட குழுவின் அங்கத்தவர்கள், நகர வர்த்தகர்கள் பெருந்தோட்ட பக்தர்கள் என அதிகளவானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துக் கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *