பலதும் பத்தும்

அமெரிக்காவில் உருவாகிறது புதிய ‘AI Force’ ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக ‘AI CZAR’ எனப்படும் சிறப்புப் பொறுப்பாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உருவாகிறது புதிய ‘AI Force’ ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | Ai Force Organization Opposition In The Ai Sector

எதிர்காலத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் வரை AI துறை பங்களிக்கக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தடுக்கும் நோக்கில் எதிர்த்தரப்பினர் சதி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அவ்வாறான முயற்சிகளை தாம் முறியடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் AI துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த புதிய அமைப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *