இலங்கை

அநுர அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய  அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று, நாட்டின் 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

அத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று (42.31%) முன்னிலை வகித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அநுர அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு | Npp Govt Completed Two Years

 

முதலாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளரும் 50%க்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெறாததால், இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இரண்டாவது விருப்பு வாக்குகள் கூட்டப்பட்டதன் பின்னர், அனுர குமார திசாநாயக்க மொத்தமாக 5,740,179 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெற்கு, மேல், வடமேல், வடமத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் அனுர குமார திசாநாயக்க அதிக செல்வாக்கை உறுதிப்படுத்தியதுடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.

வெற்றியின் பின்னர், 2024 செப்டம்பர் 23 அன்று அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதுடன், கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமராக நியமித்து செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அநுர அரசாங்கம் உறுதி செய்து கொண்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *