இலங்கை

கொலை வழக்கில் சிக்கப் போகும் ஷிரந்தி – இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்

முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதைய நிலவரத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகி உள்ளனர்.

இந்நிலையில் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும் பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் 24 ஆம் திகதி அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

CT ஸ்கேனருக்காக நிதி திரட்டியமை, தாஜுதீன் கொலை, நீலப் படையணி வழக்கு மற்றும் சிரலிய சவிய தொடர்பில் ஷிரந்தியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய, இந்த வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விசாரணைக் குழுக்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபலமான மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *