உலகம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார்.

நேற்று அன்று தனது நிர்வாகத்தின் மீதான ஊடகங்களின் செய்தி வெளியீடு குறித்து தனது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதை அடுத்தே இந்த தடையை அவர் அறிவித்துள்ளார்.

இந்த ஊடகங்கள் “பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக்” குறிப்பிட்ட ட்ரம்ப், தன்னைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் அவை செய்திகளைத் தாங்களாகவே புனைந்து கூறுவதாகக் குற்றம் சாட்டினார்.

“இதனைப் பின்பற்றி மற்ற போலிச் செய்தி ஊடகங்களும் தடை செய்யப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பும் சில ஜனாதிபதிகள் ஊடகச் செய்திகள் மீது கோபம் அடைந்துள்ளனர்.

எனினும் அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் ஊடகங்களை தடை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *