தியாகதீபம் திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் திங்கள் நல்லூரில் திறப்பு

தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டித் திலீபனின் வரலாற்றினை அடுத்த சந்ததியினருக்குக் கடத்தும் முகமாக அவரின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் யாழ்.நல்லூரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இடர்பாடுகள் காரணமாக ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்படவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஆவணக் காட்சியகம் அமையவுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட கடைகள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தால் பணிகளை ஆரம்பிப்பதில் சில தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன.
யாழ்.மாநகர சபையின் வருமானவரிப் பிரிவினர் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தியாகதீபம் திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகத்தின் பணிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
![]()