உலகம்

சிறுவர்களின் இணைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் சிறுவர்களின் இணையப் பயன்பாடு தொடர்பில் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய, 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் AI செட்போட்களை பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

அவரது யோசனையின்படி, 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும் விசேட “மினி கணக்குகள்” மூலமாக மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இணையத்திலுள்ள அதிக அடிமையாக்கும் அம்சங்கள், தீங்கான உள்ளடக்கங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் புகைப்படங்கள் போன்ற ஆபத்துகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் இந்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வாக்களிக்கவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *