உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய்த் தாங்கி கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பனாமா கொடியுடன் கூடிய ‘El Gaia’ என்ற இந்த எண்ணெய்க் கப்பல், தெற்கு கடற்பாதை வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு கடல் கண்ணி வெடியில் மோதியுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்துடன் முழு கப்பலும் தீப்பற்றி அழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) மறுத்துள்ளது.

குறித்த கப்பல் கடந்த மாதம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி முடங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் ஈரானிய ட்ரோன் தாக்குதலுக்கும் உள்ளானதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் வெளியிடும் இத்தகைய அறிக்கைகள் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதற்காகச் செய்யப்படும் பொய்ப் பிரசாரங்கள் என்றும் அமெரிக்கா மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *