பலதும் பத்தும்

அமெரிக்க பாடசாலைகளில் உலோக தண்ணீர் போத்தல்களுக்கு தடை

அமெரிக்கா – இந்தியானாவில் உள்ள பாடசாலைகளில் உலோகத் தண்ணீர் போத்தல்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போத்தல்கள் சில சமயங்களில் கூர்மையான ஆயுதங்களாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி, யெட்டி மற்றும் ஓவாலா போன்ற பிராண்டுகளின் உலோகத் தண்ணீர் பாட்டில்கள் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர்களிடையே பெரும் பிரபலமடைந்துள்ளன.

இந்த உலோகப் பாட்டில்களின் அதீத நீடித்துழைக்கும் தன்மை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் இந்த போத்தல்களை பயன்படுத்துகின்றனர்.

இருப்பினம் பாடசாலைகளில் இடம்பெற்றும் சிறிய வாக்குவாதங்களில் இந்த போத்தல்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீரை கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *