தமிழக முலமைச்சர் விஜயை மனம் திறந்து பாராட்டிய நடிகர் அஜித்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்.
மேலும் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மெச்சிலின் லீ மேன்ஸ் கார் பந்தயப் போட்டியை தொடங்கி வைக்கிறார். மேலும் கார் பந்தயத்தில் களமிறங்கும் வீரரும், தனது நண்பருமான நடிகர் அஜித்தை சந்தித்தும் விஜய் பேசுகிறார்.
இதற்கிடையில் விஜய் குறித்து அஜித் கருத்து தெரிவித்துள்ளார். அஜித் கூறும்போது,”முதலமைச்சர் விஜய் தனது பிசியான பணிகளுக்கு இடையே லண்டனுக்கு பயணம் வந்துள்ளார். இங்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான பணிகளையும் பார்வையிடுகிறார். விளையாட்டு துறையை மேம்படுத்த நிறைய பணிகளை அவர் மேற்கொள்கிறார்.
மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். ஏற்கனவே மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அவரது இந்த முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் எதிரெதிர் திசையில் பயணித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் விஜய் – அஜித் இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. பல்வேறு சம்பவங்கள் அதை மெய்ப்பிக்கும் வகையில் நடந்திருக்கின்றன. அந்த வகையில் அஜித் கலந்து கொள்ள இருக்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.
![]()