பலதும் பத்தும்

இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை

இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

துணிகளுக்கு இடையே பதுக்கல் அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

அமெரிக்காவின் புளோரிடா போன்ற பகுதிகளில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் பொதுவாக விற்கப்படுகின்றன.

பல சுற்றுலா பயணிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் தெரியாமல், இவற்றைத் தங்களது சொந்த நாடுகளுக்கு நினைவுப் பரிசாக வாங்கி சென்று பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்

இதனால், உரிய சர்வதேச உரிமம் அல்லது சான்றிதழ்கள் இன்றி இவற்றின் பாகங்களைக் கொண்டு செல்வது கடுமையான குற்றமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *