பலதும் பத்தும்

ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏ.ஐ. புகைப்படங்கள் வெளியீடு

ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏ.ஐ. புகைப்​படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு காணொளியை சில நாட்​களுக்கு முன்பு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். அதில் ஈரானின் கார்க் தீவு அழிக்​கப்​படு​வது போன்ற காட்​சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து கார்க் தீவு மீது அமெரிக்க இராணுவம் கடந்த 6 ஆம் திகதி ஏவு​கணை​களை வீசி மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தி​யது.

இந்​தச் சூழலில் ட்ரம்ப், ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​தில் உருவாக்கப்​பட்ட புதிய புகைப்​படங்​களை சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்​டார். அதில் ஒரு புகைப்​படத்​தில், ஈரான் வரைபடத்​தில் ட்ரம்​பின் முகம் பதி​விடப்​பட்டு உள்​ளது.

மற்றொரு ஏஐ புகைப்​படத்​தில் அமெரிக்க போர் விமானம், ஈரானின் கார்க் தீவு மீது குண்​டு​களை வீசி தகர்க்​கும் காட்சி இடம்​பெற்று உள்​ளது. அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில், ‘பை, பைகார்க்’ என்று குறிப்​பிட்டு உள்​ளார்.

மேலும் ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், ‘ஈரான் வீழ்​கிறது’ என்று தெரி​வித்​துள்​ளார். ஈரானின் ஹார்​முஸ் ஜலசந்​தியை அமெரிக்​கா​வின் ஒருங்​கிணைந்த பகுதி என்று குறிப்​பிட்டு மற்றொரு புகைப்​படத்​தை​யும் ட்ரம்ப் வெளி​யிட்டு இருக்​கிறார். ஈரான் கரன்சி அழிக்​கப்​பட்டு விட்​டது என்​றும், ஈரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி முழு​மை​யாக முடங்​கி​யிருக்​கிறது என்​றும் அதிபர் ட்ரம்ப் புள்​ளி​விவரங்​களை வெளி​யிட்டு உள்​ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *