உலகம்
ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலி

ஆப்பிரிக்கா ப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்டே தீவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேப் வெர்டேயின் போகோ தீவில் உள்ள சோபிலிபே நகருக்கு அருகில், சுற்றுலா முடித்து திரும்பிய பஸ் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்தனர்.
கடினமான பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் சிதறிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
![]()